NavagrahaTemples

Tuesday, July 17, 2018

Spiritual information we need to know | நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஆன்மிக தகவல்கள்

நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஆன்மிக தகவல்கள்



1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை

19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)

25. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை... 
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு... 
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? 
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்

38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்.... 
களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்

53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)

56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
திலகவதி

57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்

58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்

59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்

60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்

61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன்

62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)

63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு

64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி

65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்

66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய

67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம

68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)

69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்

70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்

71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி

72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12

73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வமரம்

75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்

76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81

77.பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்

79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி

80.அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி

82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி

84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்

85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்

86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்

87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்

89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்

90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி

91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர்

92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்

93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்

94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)

95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)

96.அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)

98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்

99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்

100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்

101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்

102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்

103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)

104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்

105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்

106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர்

107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்

108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.

10

9. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்

110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)

111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்

114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி

115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்

117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்

118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்

119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்

120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்

121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்

122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்

123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்

124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்

125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்

126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்

127. கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை

128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்

130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்

131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்

132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்

133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்

133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு

134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்

135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்

136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...
விநாயகர் அகவல்.

137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....
மூர்த்திநாயனார்

138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....
காளஹஸ்தி

139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)

140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...
மதுரை சொக்கநாதர்

141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...
திருச்சி தாயுமானவர்

142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)

143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி

145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்

146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...
திருவண்ணாமலை

147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)

148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)

149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)

150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....
சந்தியா தாண்டவம்

151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...
கேதார்நாத்

152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)

153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்

154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....
பிட்சாடனர்

155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)

156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......
நமிநந்தியடிகள்( திருவாரூர்)

157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....
திருவானைக்காவல்

158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்

160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....
திருநாவுக்கரசர்

161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...
திருக்கருக்காவூர்

162.

தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
ருத்ராட்சம்

164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
சிவன்

165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)

166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார்

167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்

168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)

169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
14

170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்

171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.

172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி

173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்

174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்

175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி

176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்

177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி

178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்

179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்

180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்

181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64

182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்
Thanks to whatsapp

12 Rachisers worship the Bhairava | 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை



 
தோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை
கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார்.
கடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு சிலரே வீடுபேறாகிய முக்தி வேண்டும் என்று கடவுளை உருகி, உருகி நினைப்பதுண்டு.

பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீபகாலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.

ஈசனின் மகனாகவும் புராணங்கள் இவரை குறிப்பிடுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து கோடானு கோடி மக்களை இவர் காத்து வருகிறார். இதற்காக இவருக்கு திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதனால்தான் “பைரவர் வழிபாடு கைமேல் பலன்” என்ற பழமொழி ஏற்பட்டது
பைரவா….” என்று மனதுக்குள் நினைத்த பாத்திரத்தில் அவர் நம்முன் வந்து நிற்பார். அவருக்கு நாம் பூஜை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். பைரவர் பற்றற்ற நிலையில் நிர்வாணமாக, நீல நிற உடலமைப்புடன் இருப்பவர்.

எனவே எல்லாரும் அவரைத் தொட்டு வணங்கக் கூடாது. அவர் பாதங்களில் பூக்களைப் போட்டு வழிபடலாம். பைரவர் மொத்தம் 64 வடிவங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த 64 வடிவங்களில் கால பைரவர் தனித்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார்.
கால பைரவருக்கு தனிக்கோவில் கட்டக் கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் சில தலங்களில் மட்டுமே கால பைரவ வழிபாடு உள்ளது.
அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்க உகந்த நாளாகும்.
பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 வீதம் ஜெபித்து பூஜிக்க வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், மது, மாமிசம் நிவேதனம் செய்ய வேண்டும்.

இது ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.
ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.
குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பைரவர் திருமேனியின் முன்னாள் மிளகை சிறுதுணியில் சிறுமூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது.

செழிக்கும். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.

அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
இவ்வளவு பெருமைகளையும் அருட்திறனும் கொண்டு விளங்கும் பைரவரை சிவாலயங்களிலும் தனி ஆலயங்களிலும் கண்டு வழிபடலாம்.
thanks to whatsapp

Viuputhi uruvana puranam | விபூதி உருவான புராணம்

ஓம் நம சிவாய.

விபூதி உருவான புராணம் ..!


 நிரஞ்சனா பர்னாதன் என்பவன் உணவையும் 
தண்ணீரையும் 
  மறந்தவனாக சிவனை நினைத்து 
     கடும் தவம் புரிந்தான். 
ஒருநாள் அவனுக்கு கடுமையான 
    பசி எடுத்தது. 
          தவம் கலைந்தது. 
                   கண்ணை திறந்தான். 

அப்போது அவனை சுற்றி 
சிங்கங்களும் 
  புலிகளும் 
    பறவைகளும் 
என பல வன உயிரினங்கள் 
யாவும் காவலுக்கு இருந்தது. 

பசியால் முகம் வாடி இருந்தவனை 
கண்ட பறவைகள் பழங்களை 
பறித்து பர்னாதன் முன் வைத்தது.  

இது ஈசனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை தொடர்ந்தான். 
இப்படியே பல வருடங்கள் கடந்தோடியது. தவத்தை முடித்து கொண்டு சிவவழிபாட்டை தொடங்கினான். 

ஒருநாள் *தர்பைபுல்லை* அறுக்கும் 
போது அவன் கையில் கத்திபட்டு 
ரத்தம் கொட்டியது. 
ஆனால் அவனுக்கோ எந்த 
பதற்றமும் இல்லை. 

குழந்தைக்கு ஆபத்தென்றால் தாய் பதறுவதை போல பதறியது ஈசன்தான்.  *சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி,* பர்னாதன் கையை பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம்….!

ரத்தம் சொட்டிய இடத்தில் 
 *விபூதி* கொட்ட ஆரம்பித்தது. 
வந்தது தாயுமானவர் என்பதை அறிந்தான். “ *ரத்தத்தை நிறுத்தி சாம்பலை கொட்ட செய்த தாங்கள் நான் வணங்கும் சர்வேஸ்வரன் என்பதை அறிவேன்* . 

இந்த அடியேனுக்கு தங்கள் சுயஉருவத்தை காணும் பாக்கியம் இல்லையா?“ 
என்று வேண்டினான் பர்னாதன். 
ஈசன் தன் சுயரூபத்தில் 
காட்சி கொடுத்தார். 

“உனக்காகவே இந்த 
    சாம்பலை உருவாக்கினேன். 

அதனால *் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படட்டும். 
உன் நல்தவத்தால் விபூதி உருவானது. 

அக்னியை எதுவும் நெருங்க முடியாததை போல விபூதியை பூசி அணிந்து கொள்பவர்களின் அருகில் 
துஷ்டசக்திகள் நெருங்காது. 

 *விபூதி என் ரூபம்.* 

அதற்கு நீயும் துணையாக இருந்த வா“ என்று ஆசி வழங்கினார் ..!

சிவபெருமான். 
விபூதியை கட்டை விரலாலும் மோதிர விரலாலும் சேர்த்தெடுத்து மோதிர விரலால் நெற்றியில் 
இட்டுக்கொள்ள வேண்டும். 

ஆனால் கட்டை விரலும் நடுவிரலும் சேர்ந்து விபூதியை எடுக்கக்கூடாது. 

கட்டைவிரலாலும் நெற்றியில் விபூதியை வைக்க கூடாது என்கிறது சிவபுராணம் விபூதியால் என்ன நன்மை? 

என்று *ஸ்ரீ *ராமர்* , 
 *அகத்திய முனிவரிடம்* கேட்டார்.* 

“பகை, 
  தீராத வியாதி, 
    மனநல பாதிப்பு, 
      செய்வினை பாதிப்பு 
இப்படி எது இருந்தாலும் தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால் 
அந்த பிரச்சனைகள் விலகும்“ 
என்று அகத்திய முனிவர் 
ஸ்ரீ ராமருக்கு உபதேசம் செய்தார். 

 *ஸ்ரீமகாலஷ்மிக்கு* உகந்ததும் விபூதி. அதனை விரும்பி விபூதி கலந்த நீரில் தினமும் அவள் நீராடுகிறாள். 

திரு என்றால் மகாலஷ்மி. 
அதனால்தான் விபூதியை திருநீறு 
என அழைக்கிறோம்.

"மந்திரம் ஆவது நீறு 
  வானவர் மேலது நீறு  
   சுந்தரம் ஆவது நீறு 
    துதிக்கப் படுவது நீறு  
     வேதத்தில் உள்ளது நீறு 
       வெந்துயர் தீர்ப்பது நீறு 
         காண இனியது நீறு 
          கவினைத் தருவது நீறு 
             தேசம் புகழ்வது நீறு 
               திரு ஆலவாயான் திருநீறே“. சிவாயநம ,

Thirumoolar account form of life | திருமூலர் கணக்கு உயிரின் வடிவம்

திருமூலர் கணக்கு உயிரின் வடிவம்



உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தைச் சொல்ல வந்த திருமூலர் ஓர் அதிசயமான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

 ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறுபோடச் சொல்கிறார். இதுதான் ஆன்மாவின் வடிவம் என்கிறார்.

""மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு

மேவியது கூறது ஆயிரமானால்

ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே''

(திருமந்திரம், சீவன், பா.2011)


100 ல 1000 ல 100,000 = 100 000 00 000 =

0. 00 000 00 0001


அதாவது, ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டுள்ளார்.

ஒரு கடுகில் 32,768 அணு என ஒரு பழந்தமிழ்ப் பாடல் அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.


""அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி

மணற்கடுகு நெல் விரலென்றேற - வணுத்தொடங்க

யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி

லச்சாணிரண்டு முழமாம்''


8 அணு = ஒரு தேர்த்துகள்

8 தேர்த்துகள் = ஒரு பஞ்சிழை

8 பஞ்சிழை = ஒரு மயிர்

8 மயிர் = ஒரு மணல்

8 மணல் = ஒரு கடுகு = 2,62,144 அணுக்கள்,

8 கடுகு = ஒரு நெல்

8 நெல் = ஒரு விரல்

8 12 விரல் = ஒரு சாண்

2 சாண் = ஒரு முழம் = 4,02,65,31,184 அணுக்கள்

4 முழம் = ஒரு கோல்

500 கோல் = ஒரு கூப்பீடு

4 கூப்பீடு = ஒரு காதம்


தற்போதைய விஞ்ஞானம் ஒரு ஹைட்ரோஜென்(Hydrogen) அணுவின் சுற்றளவு. 0.000000212

ம்ம் - ஹைட்ரோஜென் எனப் பிரித்திருக்கின்றது.

இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டுப் பார்ப்போம். ஒரு மனிதனின் முடியானது 40-80 மைக்ரோன் (Micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே எடுத்துக் கொள்வோம்.

பசு மாட்டு மயிரின் உரு அளவு =100 மைக்ரோன் -- Size of an hair - 100 Miicron -

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர் - 100 micron - 0.1 Millimeter..

இப்பொழுது திருமூலர் கூறியவாறு பசு மாட்டின் ஒரு முடியை நூறாகப் பிரிப்பதாக எடுத்துக்கொள்வோம்.

0.1/100=0.001 மில்லி மீட்டர் (MM) அதை ஆயிரமாகப் பிரிப்பதாக எடுத்துக் கொள்வோம். 0.001/1000= 0.000001 மில்லி மீட்டர். இதை நாம் (100,000) நூறாயிரமாகப் பிரிப்பதாக எடுத்துக் கொள்வோம்.

0.000001/100 000 = 0.00000000001 மில்லிமீட்டர் (MM) இதையே உயிரின் உருவத்தின் அளவாக இருக்கின்றது என்கிறார் திருமூலர். ஆகவே, திருமூலர் உயிரின் அளவாகக் குறிப்பிடுவது சராசரியாக 0.00000000001 (MM) மில்லிமீட்டர்.

அணுவின் சுற்றளவு 0.000000 212 (MM)-

ஹைட்ரோஜென். ஆனால், திருமூலர் அதற்கும் கீழே சென்று உயிரின் அளவாக, 0.00000000001-யைக் குறிப்பிடுகின்றார்.


கடவுளின் வடிவம்:


""அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே''

(திரு.புருடன்-2008)


அணுவிற்குள் அணுவாகவும் அதற்கப்பாலும் இருப்பவன்தான் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து, அவ் ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்க வல்லார்க்கு அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனை அணுகலாம்.

உயிருக்கு கூறப்பட்ட வடிவத்தை ஆயிரம் கூறுகளாக்கிக் கிடைப்பது இறைவன் வடிவம் என்று கூறுகின்றார்.

100*1000*100 000 *1000=100 000 00 000 000 = 0.00 000 00 0000001

அணுவுக்குள் அணுவாக மனிதனின் உயிர் இருப்பது என்றும், அந்த உயிர் அணுக்களின் உள்ளீடாக ஆயிரத்திற்கும் மேலான அணுப்பிளப்பில் இறைவன் இருப்பதாகக் கூறுகின்றார்.

ஐந்தாம் நூற்றாண்டிலேயே அணுவைப் பிளக்கமுடியும் என்றும், அந்தப் பிளக்கப்படும் அணுவிற்குள் மனித உயிர் இருப்பதாகவும், அதை ஆயிரம் மடங்கிற்கும் மேல் பிளக்கும்போது அதில் இறைவன் இருக்கிறான் என்றும் திருமூலர் கூறியிருக்கின்றார்.
                 வாழ்க  சித்தர்கள் உலகம்

Divine secrets | தெய்வீக ரகசியங்கள்

தெய்வீக ரகசியங்கள்

1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் . குறிப்பாக துளசி அல்லது தொட்டா சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்
2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .
3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்யபணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .
4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .
5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரிசெய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .
6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவி
லுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் , மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .
8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை , பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .
9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது , இறந்த நாகத்தின் உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து காக்கும்.
அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் ( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )
10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ..
(அனைவரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)

Thanks to whatsapp

Effects of KARMA | கர்ம வினை

🕊கர்ம வினை- Effects of KARMA 🕊


உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் 
ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ?
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று 
நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், 
அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு 
உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்" எனப்படுகிறது.
சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.  சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது  என்று தெரியாமலேயே  தன்    போக்கில்    நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 
கனவில் கூட காண முடியாத   பல ஆச்சர்யங்கள் நமக்கு  சிலசமயங்களில் ஏற்படுகிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம் ? 
ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?
நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை,  நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை,  தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம்  என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. 
முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? .
ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல ,  பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும்  நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர்.
எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது.  அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன ? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை  ஏற்படுத்துகிறதா ?

 இதற்கெல்லாம்    தெரிந்த ஒரே காரணம் நம்முடைய  "கர்ம வினை" தான் .
இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.  அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது.  அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா'  எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.
இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் 
ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம்  அல்லது கற்றுக் கொள்கிறோம்.இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.
இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது. 
யாராலும் யாருக்கும் எந்தகர்மாவையும் ஏற்படுத்தவோ  உருவாக்கவோ முடியாது.அவரவர்கள்செய்வினையின் 
பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும் .
 துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்,  ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும்,  அவரவர்கள் கர்ம கதியே. இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என நம் மதம் போதிக்கிறது.
நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு 
நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது.  இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும்,  நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன்  கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும்,வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ  ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய்  என்பதை உணர்ந்தால், நீ என்ன செய்யப் போகிறாய் ? எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக் கொள்ளப் போகிறாய் என்பது 
உனக்குப் புலப்படும்.இதை போதிப்பது தான் " ஹிந்து மதம் ".
There is NO cancellation of GOOD and BAD deeds .
பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது.  இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.
 பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. 
ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் 
சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களையும்  'துக்கங்கள்' விடுவதில்லை.
சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தனது கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.
'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்' விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'
நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே.  பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்.  நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 
அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே
 பலனாகப் பெறுகிறோம்.
எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை.நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது.
 அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது.
thanks to whatsapp

The Panchakasra secret | பஞ்சாக்ஷர ரகசியம்

ஓம் நமசிவய

பஞ்சாக்ஷர ரகசியம்


*பஞ்சாட்சரம் என்றால் என்ன ?*

ஐந்து அட்சரம் (எழுத்துக்கள்) என்று பொருள்படும்.

பஞ்ச என்பதும் அட்சரம் என்பதும் சம்ஸ்கிருத சொல்லாகும்.

தமிழர்களாகிய நாம் ஐந்தெழுத்து என்று சொல்கின்றோம்.

மேலும் 
வறுமை, 
பட்டினி, 
நோய், 
விரக்தி, 
சாவு 
இவை ஐந்தும் ஒன்று  சேர்ந்து ஒரு நாட்டையோ மாநிலத்தையோ ஊரையோ வாட்டும்போது அதனை நாம் பஞ்சம் என்கின்றோம். 

சரி ஐந்தெழுத்து என்பது என்ன ?

*ந நிலம்*

*ம நீர்*

*சி நெருப்பு*

*வ காற்று*

*ய வானம்*

இது ஒரு அற்புதமான சேர்க்கை....

தமிழில் ஓர் அதிசயம் உண்டு 

உயிர்மெய் எழுத்துக்களை *வல்லினம் , மெல்லினம் , இடையினம்* என பிரித்து சொல்வார்கள்.

கசடதபற வல்லினம், 

ஙஞணநமன மெல்லினம் , 

யரலவழள இடையினம். 

மேலே நாம் கண்ட ந ம சி வ ய எழுத்துக்கள்.

இதில் *முதல் இரண்டும் மெல்லினம்*

*மத்தியில் ஒரேழுத்து மட்டும் வல்லினம்*

*இறுதி இரண்டு எழுத்தும் இடையினம்.*
வல்லின எழுத்து அக்னியை குறிக்கும் *சி .*

வல்லின மெல்லின இடையின எழுத்துக்களில் உள்ள உயிர்த்தன்மையை கண்டு அதனை கொண்டே 

*நமசிவய* எனும் திரு ஐந்தெழுத்து மந்த்ரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தற்செயலாக ஏற்பட்டது அல்ல , 

தேவர்களும், 

ஞானிகளும் ,

ரிஷிகளும் 

மகா முனிவர்களும் இறைத்தன்மையை 

உணர்ந்து ஏற்படுத்திய உன்னத சொல். 

இயற்கையெனும் இறைவனாரை ஒரே சொல்லில் அழைக்க இந்த திருவைந்தெழுத்து மனிதர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றது 

இதனை கருத்தில் கொண்டே இந்த பஞ்சாட்சரம் உருவாக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்து த்யானித்து கவனித்தால் புரியும்.
நிலமும் நீரும் ஒருபுறமும் காற்றும் வெளியும் மறுபுறமும் இருக்க நெருப்பு மத்தியில் உள்ளதாக அமைந்துள்ளது.

*எவ்வளவு அற்புதமான அமைப்பு பாருங்கள்....*
நிலமும் நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கும் 

வானமும் காற்றும் எப்போதும் ஒன்றாக இருக்கும்.

*நெருப்பு தனித்தன்மை* வாய்ந்தது.

அதனால் அது மத்தியில் இரண்டையும் சமநிலையில் கொண்டு அமைந்துள்ளது.

இதனை மனிதனின் உடலில் உள்ள காற்று நீர் வெளி மண் நெருப்போடு இணைக்கும்போது மனிதன் அசாத்திய பலவான் ஆகின்றான்.

காற்று, மண், நீர், வெளி, நெருப்பு இவைகளின் சக்தியை அளவிட முடியாது.

இவைகள் தனித்தனியே இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை.

ஐந்தும் ஒன்று சேர்ந்தால் அழிவின் விளைவை சொல்லக்கூடுமோ, 

ஆகவே ரிஷிகளும், முனிவர்களும், முன்னோர்களும் இதனை பஞ்ச பூதங்கள் என்றனர்.   

மனிதர்கள் எல்லோருக்குள்ளும் சரிவிகிதத்தில் பஞ்சபூதம் எனப்படும் இவை இருப்பதில்லை.

ஒன்று கூட்டியும் ஒன்றை குறைத்தும் இறைவனார் படைத்துள்ளார்.

ஆகவேதான் ,

மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான குணாதிசயங்கள் இருப்பதில்லை.

சிலர் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள்.

சிலர் கோபத்தின் உச்சியிலேயே இருப்பார்கள்.

சிலர் குணக்குன்றாக இருப்பார்கள் 

சிலர் மோசமான சிந்தனையாளராக இருப்பார்கள்.

சிலர் மிக உயர்ந்த ஞானத்தினை இயல்பாக பெற்றிருப்பார்கள்.

காரணம் ..... 

இந்த பஞ்சபூதங்களின் சேர்க்கை விகிதாசாரம் கூட்டியோ குறைத்தோ சமமாகவோ அமையும் போது மனிதன் அதற்கேற்ப பிறக்கின்றான்.

அது மனிதனின் கர்மாவை பொறுத்தே அமைகின்றது 

அதனை வேறு பதிவில் பார்ப்போம்.

நமசிவய எனும் பஞ்சாட்சரம் மனிதனின் மூலக்கூறுகளில் உள்ள குறைவினை நீக்கி அவனை முழு பஞ்சபூத ஆதிக்கத்திற்கு கொண்டுவருகின்றது.

அதாவது மனிதனின் உடலில் பஞ்சபூதங்களில் எதனுடைய சக்தி குறைக்கப்பட்டு எதனுடைய சக்தி கூட்டப்பட்டுள்ளதோ அதனை சமமாக்கி அந்த மனிதனை முழுமையாக்குகின்றது.

காரணம் 

அதில் உள்ள *பஞ்சபூத* சக்தியாகும்.

அவ்வாறு முழுமையை காணும் மனிதன் மிக அதிசயமான உணர்வுகளால் தூண்டப்பட்டு மனிதர்களில் மேன்மையை கொண்டவனாக மாற்றம் காணுகின்றான்.

அவனுக்கு உலகின் இயக்கமும், 
அந்த இயக்கத்தின் காரணமும் புரிகின்றது.

தான் யார் என அறிகின்றான் , 

தான் யார் என அறிந்தவன் இறைவனாரை அறிந்தவனாகின்றான்.

இறைவனாரை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஏதுமில்லை, 

ஆகவே அவன் தான் கண்டதை உலகிற்கு எடுத்து சொல்கின்றான். 

அவர்களைத்தான் சாதாரண மக்களாகிய நாம் 

ஞானிகள் என்கின்றோம், 

ரிஷிகள் என்கின்றோம், 

முனிவர்கள் என்கின்றோம், 

சித்தர்கள் என்கின்றோம் , .

புத்தர்கள் என்கின்றோம்.

எதனால் இந்த மாற்றம் ஏற்படுகின்றது?

பஞ்சபூத சம நிலையை கண்டதால் இந்த அசாத்தியமான மாற்றம் நேர்கின்றது.

பஞ்சாட்சரம் சொல்வதால் மனிதனின் அந்தராத்மா தூண்டப்பட்டு 

அதுவரை அவன் கண்ட, 

கேட்ட, 

அனுபவித்த அனைத்தையும் 

பொய்யென படம் போட்டு காட்டி 

அவனை 

அவனது எண்ணங்களை 

செயல்களை 

கர்மாவை 

தூய்மையாக்கி 

அந்த  மனிதனை மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்கின்றது.

இவ்வாறான பஞ்சாட்சரம் யாருக்காக உருவாக்கப்பட்டது ? 

ஏன் உருவாக்கப்பட்டது ?

மனிதன் பேசத்துவங்கிய காலம்தொட்டே இந்த மகாமந்த்ரம் சொல்லப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகின்றோம்.

எம்பெருமானாராகிய சிவபெருமானை குறிக்கும் சொல்லாக இந்த ஐந்தெழுத்து கருதப்படுகின்றது.

விபூதி, ருத்ராக்கம், திருவைந்தெழுத்து இவை மூன்றும் சிவபெருமானாரை குறிக்கும் கருவிகளாகும்.

கருவிகளா ? 

ஆமாம் இவைகள் கருவிகள்தான். 

ஏனெனில் இவை தனித்தும் சேர்ந்தும் செயலாற்றும் வல்லமையை கொண்டவையாகும். 

விபூதியை கொஞ்சம் எடுத்து அதில் சில மந்த்ரங்களை சொல்லி இடும்போது சில தீய சக்திகள் மறைகின்றன.

ருத்ராக்கம் ஒரு மணியை கழுத்தில் அணிந்துகொண்டால் 108 சிவகணங்கள் அணிந்தவரை சுற்றி காவலாகின்றன.

திருவைந்தெழுத்தினை உள்ளார்ந்து ஒதுபவனை உலகஇயக்கம் அறிய செய்கின்றது.

இவ்வாறான செயல்களை விபூதி, ருத்ராக்கம், திருவைந்தெழுத்து செய்வதால் அவைகளை கருவிகள் என்றே சொல்லல் வேண்டும்.

இவ்வாறாக இத்திருவைந்தெழித்தின் மகிமையை உணர்ந்த ஞானப்பெருந்தகையோர் இதில் உள்ள சக்திகளை பலவகையாக பிரித்து பல்வேறு வகைப்படுத்தினார்கள்.

அவை,

ஸ்தூல பஞ்சாட்சரம் 

சூக்கும பஞ்சாட்சரம் 

அதிசூக்கும பஞ்சாட்சரம்

ஸ்தூல பஞ்சாட்சரம் என்பது நமசிவய இதனை எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் குருவின் உதவியும் இன்றி சொல்லி வரலாம்.

சூக்கும பஞ்சாட்சரம் என்பது சிவயநம இதனை மனதிற்குள் சொல்லவேண்டும் இறைவனாரை ஒளி உருவாக மனதில் சித்தரித்து உள்மனதில் உருவம் கொண்டு சொல்லி வரவேண்டும். இதனையும் குருவின் உதவியும் இன்றி சொல்லி வரலாம்.

அதிசூக்கும பஞ்சாட்சரம் என்பது சிவய சிவசிவ இதனை குருவின் மூலமாகவே அறிய வேண்டும் , 

குருவின் வழிகாட்டுதல்படி சொல்லி வருதல் வேண்டும்.

இன்னும் காரண பஞ்சாட்சரம், அதிகாரண பஞ்சாட்சரம் என்றெல்லாம் உள்ளது.

அவை முறையே சிவசிவ என்றும்,

சி என்றும் சொல்லப்படுவது 

இதன் முறைகளையும் உத்தம குருவின் வழிகாட்டுதல் மூலமாகவே சொல்லி பழகுதல் வேண்டும்.

உள்ளத்தில் தூய்மை, செயலில் தர்மம், வாழ்வில் சத்யம் கொண்டவர்கள் மட்டுமே எல்லாவிதமான பஞ்சாட்சரங்களையும் சொல்லவேண்டும்.

எந்த பஞ்சாட்சரமாக இருந்தாலும் அதனை சத்யத்தின் மறுஉருவாகவே பார்க்கவேண்டும்.

மனத்தூய்மை , எண்ணங்களில் தூய்மை தனிமனித ஒழுக்கம் அற்றவர்கள் பஞ்சாட்சரம் சொல்லக்கூடாது.

அது பாபங்களை சேர்க்கும்.

தூயவர்களாக நின்று லோக க்ஷேமம் எண்ணி எல்லோரும் நம் மக்களே எல்லோரும் நலம் பெறவேண்டும் எனக்கருத்தில் கொண்டு,

நமசிவய சொல்லி வாருங்கள்.

உலகம் செழிக்க வாழ்த்துங்கள், வாழுங்கள்.
thanks to whatsapp

Hindu spiritual fair 2020 | Guru Nanak Collage | Aanmeegam Exhibition | ...

Hindu spiritual fair 2020 | Guru Nanak Collage | Aanmeegam Exhibition | ...  The fair will be held from January 29 to February 3, at Guru...