கால பைரவர்
*க* டுமையான கிரக தோஷம் உள்ளவர்கள் கால பைரவரை வழிபடுங்கள் என சொல்வது வழக்கம்.
யாராலும் தீர்க்க முடியாத பிரச்னைகளை கால பைரவரால் தீர்க்க முடியும்.
இவருக்குள்ளே பன்னிரண்டு ராசிகளும் அடங்கியிருப்பதால்தான் இவருக்கு காலபைரவர் என்று பெயர்..
இவருடைய ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு ராசியாக உள்ளதைப் பாருங்கள்..
*மேஷம் _ தலை..*
*ரிஷபம் - வாய்..*
*மிதுனம் - கைகள்..*
*கடகம் - மார்பு..*
*சிம்மம் - வயிறு..*
*கன்னி - இடுப்பு..*
*துலாம் - பிட்டம்..*
*விருச்சிகம் - பிறப்புறுப்பு..*
*தனுசு - தொடை..*
*மகரம் - முழங்கால்..*
*கும்பம் - கால்களின் கீழ்பகுதி..*
*மீனம் - பாதத்தின் அடிப்பகுதி..*
இவருடைய வாகனம்:
*நாய்..*
இவர் காசியில் காவல் பணியில் இருப்பவர்..
எனவே காவல் பணியில் இருக்கும் நாயை வாகனமாக கொண்டு உள்ளார்..
இந்த நாய்க்கு,
*"சாரமேயன்"*
என்ற பெயர்..
காவல்துறையில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் காலபைரவரை வணங்கினால் அவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்.
*'காலபைரவர் சிவபெருமானின் அம்சம்'*
இந்த பிரபஞ்சத்தையே ஆட்டி படைக்கும் அளவற்ற சக்தி கொண்டவர் சிவபெருமான்..
அந்த சிவபெருமானின் சக்தியில் கோடியில் ஒரு பங்கால் உருவானவர்..
*'காலபைரவர்'*
இவரை வணங்குவோர்க்கு இவரால் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம்..
சிவபெருமான் அசுரர்களை அழிக்க - அடக்க,
அசுரர்களை எதிர்த்து போரிடும் போது ஏற்ற உருவமே பைரவக்கோலம்..
இவர் எதிரிகளை அடக்க ஆயுதம் எடுக்க வேண்டியதில்லை..
ஒரே ஒரு சத்தம் போட்டால் போதும்..
*ஜாதகத்தில்,*
*ஏ* ழரைச்சனி,
*அ* ஷ்டமச் சனி..
போன்ற கொடுமையான பலன்கள் நடக்கும் போது அவரவர் வயதுக்கு தகுந்த மாதிரி மிளகை எண்ணி எடுத்து கொண்டு,
அதை ஒரு சிவப்பு துணியில் நூலில் கட்டி,
ஒரு பெரிய மண் அகல்விளக்கில் நிறைய நல்லெண்ணெய் விடுத்து காலபைரவருக்கு,
*'மிளகு தீபம்'*
சனிக்கிழமைகளில் ஏற்றிவர
சனியால் ஏற்பட்ட தொல்லைகள் மற்றும் கஷ்டங்கள் விலகுவதோடு வராக்கடன்களும் வசூலாகும்.
*மேலும்,*
*கா* லபைரவருக்கு சிவப்பு கலரில் பட்டு எடுத்து சாற்றலாம்.
*சிவப்பு கலரில்,*
*செ* வ்வரளி,
*செ* ந்தாமரை,
*சி* வப்பு ரோஜாப்பூ..
ஆகியவற்றை மாலையாக அணிவித்து,
காலபைரவரை வணங்கி வர ஏழரைச்சனி - அஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.!
*ௐ ஸ்ரீ காலபைரவாய நம..!!*
*ௐ ஸ்ரீ நம சிவாய நம...!!!*
*நன்றி*
thanks to whatsapp
No comments:
Post a Comment