NavagrahaTemples

Monday, August 6, 2018

தலைகீழாக நிழல்விழும் ஈசனின் கோவில் கோபுரம் – விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்!

தலைகீழாக நிழல்விழும் ஈசனின் கோவில் கோபுரம் – விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்!
தென்னிந்திய கட்டடக்கலையின் திறமையின் சான்றாக இந்த கோயில் திகழ்கிறது. ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்களுக்கும் சான்றாக திகழ்கிறது.
பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ஹொய்சாலா வம்சத்தினரால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டு வந்தது.
விருபாட்சர் கோயில் கோபுரத்தின் நிழல் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் ரங்க மண்டபத்தில் இருக்கும் சுவரில் தலைகீழாக விழும் மர்மத்தின் காரணம் இன்றுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் புரியாத புதிராகவே விளங்குகிறது. ஒரு நிழல் தலைகீழாக விழவேண்டுமென்றால் பூதக்கண்ணாடி போன்ற ஏதாவது ஒரு போல் இடையில் இருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கோயில் கோபுரத்தின் நிழல் எப்படி தலைகீழாக விழுகிறது என்பதே இந்த மர்மத்தின் உச்சமாகும்.
கோயிலின் நிழல் தலைகீழாக விழுவது இறைவனின் அருள் என்று பக்தர்களும். இல்லை இது கட்டடக்கலையின் நுட்பம் என்று அறிவியலாளர்களும் காலங்காலமாக விவாதித்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை இரு தரப்பு வாதங்களும் நிரூபிக்கக்படவில்லை என்பதே உண்மை.
அந்நிய படையெடுப்புகள் பல வந்தாலும் இந்த கோயிலை எதுவும் செய்ய முடியவில்லை என்பது இந்த கோயிலின் மற்றொரு தனி சிறப்பாகும். படையெடுப்புகளால் 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் எந்த பாதிப்புமின்றி கம்பீரமாக காட்சி தருகிறது.
எண்ணிலடங்கா மர்மத்தோடு விருபாட்சர் திருக்கோயில் நம் கலாச்சாரத்தின் சின்னமாகவும் நம் கட்டிடக்கலையின் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் சின்னமாகவும் விளங்கி நமக்கெல்லாம் பெருமை சேர்கிறது.

No comments:

Hindu spiritual fair 2020 | Guru Nanak Collage | Aanmeegam Exhibition | ...

Hindu spiritual fair 2020 | Guru Nanak Collage | Aanmeegam Exhibition | ...  The fair will be held from January 29 to February 3, at Guru...